ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
நடிப்பில் வென்றனர்
நடிகர் திலகத்தை
அரசியல்வாதிகள் !
வந்தார்
நேர்மையான அரசியல்வாதி
கண்டது கனவு !
பேசினார் பொதுநலம்
அருகில்
தேர்தல் !
மனிதனாகச் சாதிக்க
விலக்கு
மது !
கேளிக்கை அல்ல
கேடிகளுக்கானது
மது !
மகிழ்ச்சி என்று தொடங்கி
துன்பத்தில் முடியும்
மது !
வன்முறை வளர்க்கும்
நட்பை அழிக்கும்
மது !
வாரம் ஒரு நாள் தொடக்கம்
தினமும் என்றாகும்
மது !
ஓசியில் தொடங்கி
திருட்டில் முடியும்
மது !
வெறும் வாசகமல்ல
முற்றிலும் உண்மை
குடி குடி கெடுக்கும் !
போராடித் தோற்றன
மரங்கள்
புயல் !
வளமான
மனிதாபிமானம்
ஏழை வீட்டில் !
உணரவில்லை
தன் பலம்
பிச்சையெடுக்கும் யானை !
மரம் விட்டு உதிர்ந்த
கவலையால்
இலை சருகானது !
பார்வையாளர் கூடிட
போய் பேசுகின்றன
தொலைக்காட்சிகள் !
.