காலத்தை வென்றவரே வெற்றியாளர்
காதலித்தேன்.
மென்மையானேன்..
காதலில் தோல்வியுற்றேன்...
மனவலிமை பெற்றேன்...
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...
கடந்த காலத்தை நினைத்துத் துன்பப்பட்டு மன நெருப்பில் எரிபவர்,
அந்நெருப்பிற்கு எரிபொருளாய்,
தனது நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும் இடுகிறார்...
தன் காலமெல்லாம் போன பின்னே அதை எண்ணி வருத்தங்கொள்கிறார்...
அற்பமான மன சபலங்களில் வீழ்ந்தவர்கள் தன் வாழ்நாள் முழுவதுமே அவற்றிற்குள்ளேயே கழிக்கிறார்கள்...
அதைவிட்டு எழுந்திருக்க முயற்சியும் செய்வதில்லை...
எழுந்திருப்பதுமில்லை...
கஷ்டமில்லாமல் வாழ்வென்று எதுவும் இல்லை...
நாம் ஒரு பாறையாய் பிறந்திருந்தால் வெயிலில் வேகவேண்டும்..
மழையில் குளிர வேண்டும்...
பாறையான நம்மை வெடி வைத்தும், சுத்தியல் மற்றும் உளி கொண்டும் மனிதர்கள் உடைப்பார்கள்...
இப்படி இயற்கையின் படைப்பில் எல்லாப் பொருட்களுக்கும், உயிர்களுக்கும் துன்பங்கள் உள்ளனவே....
துன்பங்கண்டு துன்புறுபவர் பகுத்தறிவில்லா மூடரே...
துன்பத்திலும் இன்புறும் மனோபலம் வேண்டும்...
அப்போதான், எதையும் சாதிக்கும் துணிவு பிறக்கும்...
துணிவே துணையானால், முன்னேற வழி பிறக்கும்...
காலத்தை வென்றவர்களே வெற்றியாளர்களாகிறார்களே தவிர கடந்த காலத்தை எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் அல்ல...