யாரோ ஒருத்தியின் கவிதை

கவிதைகளை எழுத
காதல் எனும்
போர்வை தேவையில்லை
கடவுள் தந்த ஞானமே
போது.


கரம் உள்ளவன் மட்டும் எழுதினால்
கவிதைகள் பிறக்கும்
என்றால் இங்கு பலர்
கவிஞன் ஆகியிருக்க
முடியாது.


சிந்தனைகளை சித்தரிக்கும்
போதுதான்
கவிதைகள் பிறக்கும்
என்றவர்கள் பலர்
உண்டு.
நான் கூறுகிறேன் ஒவ்வொறு
ஆசைவிழும் சுவையான
கவிகள் உண்டு என்று.


கவிதைகள் எழுத
தகமைகள் தேவையில்லை,
தழிழ் மொழியே
தேவை என்பதையும்
நினைவில் வைத்துக் கொள் மானிடமே.


நான் எழுதிய கவிதைகள்
உன்னைத் தழுவியதாக
இருக்கலாம்.
ஆனால்,
அனைத்தும் என் உணர்வை
கழுவியதுதான் என்பதையும் புரிந்து
கொள் மானிடமே.


நான் யாரே ஒருத்திதான்
நான் பேசிய மொழியல்லவா
இந்த கவிதை என்று புரியும் உனக்கு என்றாவது.


ஏழை என்று வந்த போது எட்டி
நின்று விரட்டினாய் அன்று,
கவிஞன் என்று வந்தபோது கதிரை
தந்து அமர்த்தினாய் இன்று.


யாரோ ஒருத்தியின்
கவிதை
ஏதோ மனதை வருத்தது
என்று நினைத்துவிடதே
இதுவே என்
இறுதிக் கவிதையாகவும் இருக்கலாம்.


கவிதயை படி
கடவுளை மதி
உனக்காய் பிறக்கும்
ஓர் வழி......!




பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (7-Jan-17, 8:06 am)
பார்வை : 84

மேலே