கருப்பு

கருப்பு எனக்கு மட்டுமல்ல
பலருக்கும் அதன்மேல் உண்டு ஈர்ப்பு !!
அதன் அழகை எப்படி சொல்ல
கரு மேகம், கார் கூந்தல், கண்ணன்,
என அனைத்தும் அழகு தான்
என் வாழ்வில் நான் தேர்ந்தேடுத்த
எல்லாமுமே கருப்பு தான்
நிறத்தில் தொடங்கி நண்பன்,
கணவன், கடவுளால் எனக்களிக்கப்பட்ட
முதல் குழந்தை வரை இதுவரை
எல்லாமுமே கருப்பு தான் !!
கறுப்பே சிலர் உன்னை அபச நிறம்
என ஒதுக்குவதற்காக கவலை கொள்ளாதே !!
கடவுள் உன்மேல் இருந்த காதலால் தான்
கருவை காக்கும் இடத்திற்கு கருப்பை எனப்பெயரிட்டார் !!!

எழுதியவர் : selvi (7-Jan-17, 3:08 pm)
Tanglish : karuppu
பார்வை : 113

மேலே