கடவுளின் மீது காதல்
அணுக்குள் அணுவாய் ஆற்றலை வைத்து,
அவற்றின் மூலம் உலகை கருவாக்கி,
உருவாக்கி அறிவியலை ஏற்றமுற பகுத்தறிவியலைப் படைத்தாயே...
உன்னை அறிய முற்படும் போதெல்லாம் தென்படாமல் உணர வைக்கிறாயே நான் சுவாசிக்கும் காற்றாய்...
உன்னில் மூழ்கி நீராட நினைக்கும் போதெல்லாம் மழையாய் தூறி என்னை நீராட்டி செல்கிறாயே மழைநீராய்...
எங்கும் எதிலும் காண்கிறேன் உன்னையே...
எப்போதும் நேசிக்கிறேன் உன்னையே....
ஜீவ ஒட்டத்தில் மின்னோட்டத்தை அடக்கி உயிர்களை இயக்கும் நீயே என்றும் நான் நம்பும் உண்மையாவாயே...
உன்னையே எண்ணி,
உன்னையே சிந்தித்து,
உன்னுடனே வாழ்கிறேனே...
என்னை நீயே அறிவாயே...
தாயுமானவனே,
தந்தையுமாகி நல்ல அறிவைத் தருபவனே,
உன்னை மறந்தால்,
மறுத்தால் என்னுயிரும் என்னை பிரியட்டுமே...
எவ்வுயிரும் நீயாகவே தெரிவதால்,
நான் நேசிக்கும் உன்னை துன்புறுத்த மனதாலும் நினையேன்....