தாய்மை

புரியாத மொழி
எளிதாய் கற்றுக் கொள்கிறது
தாய்மை
@@@@@@@@@@@@@@@@@@
விரல் நீட்டும் தாய்
வினோதமாய் பார்கிறது
நிலவு
@@@@@@@@@@@@@@@@@@
தூளியில் குழந்தை
கவனித்து விட்டு வருகிறது
தாயின் தூக்கம்
@@@@@@@@@@@@@@@@@@
ஓடும் குழந்தை
விடாமல் துரத்துகிறது
தாயின் பதற்றம்
@@@@@@@@@@@@@@@@@@
குழந்தையின் முதல்நடை
விழுந்து விட்டது
ஆனந்த கண்ணீர்
@@@@@@@@@@@@@@@@@@
- கி.கவியரசன்

எழுதியவர் : கி.கவியரசன் (9-Jan-17, 9:54 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : thaimai
பார்வை : 1022

சிறந்த கவிதைகள்

மேலே