வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு

சூதாட்டத்தில்
சுழலும்
கிரிக்கெட்டை
தடை செய்

மனிதனின்
உயிரையே
பறிக்கும்
மதுக்கடையை
தடை செய்

ஊழலில்
ஊறித்திளைத்த
ஊழல் கட்சிகளை
தடை செய்

மனித மூளையை
முடக்கும்
போதைப்பொருட்களை
தடை செய்

நீதியை
நிதிக்கு
விலைபேசும்
நீதிமன்றங்களை
தடை செய்

காக்கவேண்டிய
காவல் நிலையங்களே
பொதுமக்களை
அச்சுறுத்தும்
காவல் நிலையங்களை
தடை செய்

மெய்யை
பொய்யாக்கி
பொய்யை
மெய்யாக்கும்
போலிகளை
தடை செய்

மிக மிக முக்கியமாக
மனிதனின் மனிதத்தை
அழிக்கும்
மதத்தை
சாதியை
பிரிவினையை
தடை செய்

இதையெல்லாம்
விட்டுவிட்டு
என் தமிழ்மண்ணின்
அடையாளத்தை
உலகம் வியக்கும்
வீரத்தை
ஜல்லிக்கட்டு என்னும்
விளையாட்டை
தடை செய்வதா ?

ஒருபொழுதும்
விடமாட்டோம்
எங்கள்
உரிமைகளை
அடையாளங்களை
இழமாட்டோம்
விழமாட்டோம் !

எழுதியவர் : சூரியன்வேதா (9-Jan-17, 7:55 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 130

மேலே