பத்தும் கதை-கவிஜி

1. திக் திக் இரவில்....

பொம்மையை கட்டிப் பிடித்து தூங்குவது அவள் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக அந்த ஓர் இரவில் அவளைக் கட்டி பிடித்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தது பொம்மை.

2. நவீனத்துவம்

யோசித்துப் பார்த்த பூசாரி அருகினில் இருக்கும் ATM வாசலில் கடவுளை வைத்து பூசை செய்ய ஆரம்பித்திருந்தார்.

3. மாடர்ன் ஆர்ட்

கல்லறையை வரைத்து விட்டு படுத்தவனை காலையில் காணவில்லை. பிறகு அவனின் சட்டை கல்லறை ஓவியத்துள் கிடப்பதாக காட்சி விவரிக்கப்பட்டது.

4. கதையல்ல நிஜம்

வந்தே விட்டது புலி. நம்ப மறுத்தது, 'புலி வருது புலி வருது' என்று கூறிய கூட்டம். கதையின் சுவாரஷ்யம் எதுவென்றால் வந்த புலியும் இன்னும் நம்பவில்லை கதையை.

5. அது அப்டித்தான்

பாண்டிச்சேரிக்கு அமர்ந்து கொண்டு போன கூட்டம் திரும்புகையில் படுத்துக் கொண்டு வந்தது.

6. தொடர்கதை

பேய்க்கதை பாதி முடிந்த பிறகுதான் சட்டென நினைவுக்கு வந்தது. கதை சொல்லிக் கொண்டிருந்த பாட்டி போன வாரம் செத்துப் போனது....!

7. மஞ்சள் நிறத்தவள்

"பிச்சை விழும் வரை சிவப்பு விழக் கூடாது..." ஒரு கையில் வேண்டிக் கொண்டு மறு கையில் பிச்சை எடுக்கிறாள் சிக்னலில் கையேந்துபவள்.

8. இக்கரைக்கு அக்கரை பச்சை

துபாய் கட்டடங்களை தமிழன் காட்டுகிறான். தமிழ் நாட்டுக்கு கட்டடங்களை வடமாநிலத்தவன் கட்டுகிறான். இக்கரைக்கு அக்கரை பச்சையா எனத் தெரியாது. கட்டடம் என்பது மட்டும் தெரிகிறது.

9. நல்லா ஏத்துறாங்கடா போதையை.

பனை மரத்துக்கடியில் நின்று கள் குடித்துக் கொண்டிருந்தான் ஊர் இளைஞன். பால் குடித்துக் கொண்டிருப்பதாக நம்பினார் சற்றுமுன் டாஸ்மாக்கில் மட்டையாகி எழுந்து வந்தவர்.

10. பத்தாவது கதை

பத்தாவது கதையை எழுத முன்னிருந்த 9 கதைகளிலும் இருந்து ஒவ்வொரு எழுத்துக்களாக திருட ஆரம்பித்தான் கதையின் நாயகன்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (12-Jan-17, 9:59 pm)
பார்வை : 288

மேலே