புது நெல்லும் செங்கரும்பும்
புதுநெல்லும் செங்கரும்பும்
பொங்கலுக்கு காத்திருக்க
பூப்பெய்தும் புது பொண்ணு மாமனுக்கு காத்திருக்க
மண்ணழகு பூம்பொழிலில்
சொத்தான உழவனவன்
வியர்வையிலே முத்தெடுத்து
பொங்கலிலே சொத்தெடுக்க
பொன்மேனி தேவியவள்
வெண்மேனி சிங்காரமாய்
மண்மேனி குடத்தினிலே
குதியாட்டம் போட்டுநின்று
சதிராட்டம் ஆடிநின்று
பூவாட்டம் பொங்கிவர
மலராட்டம் மகிழ்ந்தனவே
தமிழன் நெஞ்சம்
இனிய பொஙக்ல் நல்வாழ்த்துக்கள்
eluthu.com
குழுமத்துக்கும்
கவிபடைக்கும்
உள்ளங்களுக்கும்
நேசம்மிகு ரசிகர்களுக்கும்
என்றும் மலரட்டும்
தமிழன் புகழ்