ஜல்லிக்கட்டு

கொதித்தெழுங்கள் தமிழர்களே கொதித்து எழுங்கள்.
கொஞ்சம்கூட தமிழர்குரல்
எட்ட வில்லை.
மதித்துவந்தோம்!மரியாதை
தங்க வில்லை.
மாபுரட்சி செய்தால்தான்
மேலோர் அன்று
விதித்துவைத்த சட்டத்தை
மாற்றி உடனே
வீரமுள்ள ஜல்லிக்கட்டை
நடத்தி வைப்பர்.
சதித்திட்டம் தீட்டித்தான்
தமிழர் கலையை
சாய்த்துவிட வடநாட்டார்
எண்ணு கின்றார்.