கண்ணீரில் கரைந்த நட்பு
பெயர் தெரியாது
ஊர் தெரியாது
எப்போதோ சிறு உதவி மட்டும் செய்தேன்
நான் என் வழியில்..
அவன் அவன் வழியில்..
மழை வெள்ளத்தில்
என் கிராமமே மூழ்க
ஓடோடி வந்தான்..
தன் சிரமம் பார்க்காது..
தண்ணீரில் மூழ்கி
பல காயங்கள் வாங்கி..
எனக்காக என் ஊரின் பலரைக் காப்பாற்றினான்..
அந்தக் காப்பாற்றும் முயற்சியில்
கடைசியாக என்னைக் காப்பாற்றியவன்
திடீரென்று வந்த வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டான்..
இன்று வரை அவனுக்காய்
என் நெஞ்சம் அழுது கொண்டேயுள்ளது..
நட்பாக பழகவில்லை
ஆனால் உயிர் தருமளவு
சிறு உதவிக்காய் அவன் காட்டிய அன்பு
நட்பை விட கோடி முறை உயர்ந்ததன்றோ...