என் இலக்கு என் ஓட்டம்

என் இலக்கு என் ஓட்டம்
எந்தத் தடையும் என்னைத் தீண்டாது
எந்தன் லட்சியம் முன்னே
அதை துரத்தியபடி நான் பின்னே
கால்களுக்கு முட்களின் வரவேற்பா..
நீரில்லா பாலைவனமே பாதையா..
காற்றிள்ள ஒருவெளி இடையிலா..
எதற்கும் கவலையில்லை..
அதோ அங்கே தூரத்தில் தெரிகிறதே
எனது லட்சியக் கனி..
அதனை பறிக்கும் வரைக்கும் ஓய்வில்லை..
அதோ அந்த வெற்றிக் கோட்டை தொட்டதும்
நீங்கள் சொல்லவிருக்கும் அறிவுரையைக் கேட்கிறேன்...
அதோ அந்த வெற்றி நீரை அறிந்தியதும்
நீங்கள் தாகம் தணிக்க கொடுக்க இருக்கும்
பழரசத்தைக் குடித்துக் கொள்கிறேன்..
அதுவரை எனது லட்சியம்
எனது ஓட்டம்
எனது வழி
எப்போதும்
அந்த இலக்கு நோக்கி மட்டுமே...