சீராக புரட்டிப்பார்

அறிஞர்கள் காட்டுகின்ற பாதை தன்னில்
-----அடியொற்றி வைக்கவே தயங்க லாமோ?
வறியவர்கள் உள்ளதோர் நாடே என்றே
-----வக்கணையாய் கேலிசெய்யும் மாந்த ரிடை
அறிஞர்கள் உள்ளரென எடுத்து சொல்லு
-------கண்டறிந்து, கேட்டறிந்து கல்வி கற்று
அறிவை இந்நாட்டில் வளர்த்து கொண்டு
------அயல்நாட்டு வேலைத்தேடி ஓடலா மோ?

எம்முன்னோர் இயற்கையின் வழியில் செல்ல
-----இனங்காட்டி சென்றிட்டார் என்றே இயம்பு!
பூமிதன்னின் சுழற்சி, பூஜ்யத்தின் பெருமை
--------பிரபஞ்சவெளி உண்மை, பூக்களது பயனுமே
அமிழ்தான தமிழில்தான் ஏடுகள் தந்தார்
------அவர்தாம் சித்தர்களென்றே அழகாய் கூறு?
தாமேதான் கண்டதாய் பிதற்று வோரின்
-----தம்பட்டமும், தலைக்கனமும் அகற்றி விடு!

பிறக்கின்ற நாளதுவும், போகின்ற நாள்கூட
---பூமழையும் , பனிபொழியும் காலங் கூட
சிறப்பாக சொல்லிசென்ற முன்னோர் தம்மை
-----சீராட்டி, பாராட்டி போற்றிடாது, புறந் தள்ளி
புறம்பாகவே ஒதுக்கிவிடின் நன்றோ கூறு?
-----புலர்பொழிதின் காலைதனின் சிறப்பை பாடி
அறம்வளர்த்து, அறிவும்வளர்த்து அதனு டே
----ஆன்மிகம் அழகாய்தான் வளர்த்த னரே!

கம்பனிடம் கவிதையமுது பொங்கி யெழுந்து
-----காலங்கடந்து நிற்கின்ற அழகை சொல்லு!
கம்புசுழற்றும் வித்தையெலாம் கச்சித மாய்
------ கற்றுதரும் ஆசான்கள் உள்ளா ரென்றே
வம்பளக்கும் மாந்தரிடம் சொல்லி நின்றே
-------வந்தேபார் பல்லுடையும் என்றே கூறு!
செம்மொழியாம் தமிழ்மொழியின் ஏடுக ளெலாம்
- -----சீராக-புரட்டிப்பார்! புரிந்திடு மென்றே இயம்பு!

கவிஞர் கே. அசோகன்

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (16-Jan-17, 9:26 pm)
பார்வை : 106

மேலே