தமிழினம்

தடைகளை தகர்க்கும்
தமிழினம்
தரணி ஆளும்
தமிழினம்
மாணவர் எழுச்சி
மௌன புரட்சி
இனத்தின் பெருமை
காக்கும் முயற்சி
தனி துளியாய் இருந்தோம்
வெள்ளம் என இணைந்தோம்
கடலென சேர்ந்தோம்
தடை செய்யும்
கூட்டம் தடம் அழியும்
தமிழன் குணம் அறியும்
வெல்லும்வரை போராடும்
நம் போர்குணம் வெல்லும்
சரித்திரம் பேர் சொல்லும்
வாடிவாசல் வழி
காளை செல்லும்
தடைகளை தகர்க்கும்
தமிழினம்
தரணி ஆளும்
தமிழினம்