தமிழா நீ பொங்கிவிடு

தமிழா நீ பொங்கிவிடு
தரணியிலே தமிழனவன்
வந்தாரை வாழவைத்தும்
வந்தவனோ
நொந்தவனாய் பேராசை கொண்ட நெஞ்சாய்
உண்ட வீட்டில் கள்ளம் வைத்தும்
மன்னிக்கும் உன்குணத்தை கண்டே
ஏமாற்றும் குணத்தை கொண்டான்
ஏமாற்றும் மிருகமவன்
நாம் உரிமையிலும்
உரிமை கொண்டான்
விட்டுதரும் மனமதனில்
தான்மானத்தை விட்டுதராத
தமிழனென தரணியிலே
காட்டிடுவோம்
உயிருக்கு
அஞ்சுகின்ற தமிழனென
அவன் நினைப்பின்
நான் அஞ்சாத நெஞ்சடைச்சன்
கட்டபொம்மன் வம்சமடா
என்றே நாம் காட்டிடுவோம்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (18-Jan-17, 6:54 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 94

மேலே