தமிழாவிழித்தெழு வீறுகொள்

அடங்கமறு...
ஆர்ப்பரி...
விழித்தெழு...
வீறுகொள்...
காளையை பூட்டிய கயிறுகள் தெறிக்கட்டும்,
எம்தமிழின காளைகளின் திமிறு ஜெயிக்கட்டும்,
ஏறுதழுவுதல் எம்தமிழினத்தின் பெருமை,
அதை தடுப்பதற்கு எவர்க்கும் இல்லை உரிமை....

இங்கே தட்டினால் கதவுகள் திறக்காது,
முட்டினாலொழிய முடிவுகள் கிடைக்காது,
சோர்வதற்கு தமிழர்கள் ஒன்றும்
கலப்பின காளைகள் கிடையாது,
காங்கேயம் காளைகள்....
சீறிப்பாய்ந்தால் சிறகு முளைக்கும்,
சீற்றங்கொண்டால் சிலுவாய் தெறிக்கும்....

புலியை முறத்தால் விரட்டிய
மறத்தமிழச்சியின் மக்கள் நாங்கள்,
காதலுக்கென்று,
வீரத்திற்கென்று,
அறம்...பொருள்...இன்பமென்று,
தரம்பிரித்து...தமிழ் குடித்து...
வளர்ந்தவர்கள் நாங்கள்,
தமிழ் எமக்கு மொழியன்று
மூச்சு....

சிவனை தொழுவதற்கு முந்தி
நாங்கள் தொழுவது நந்தி,
காளைகள் உமக்கு காட்சிபொருள்
எமக்கு அவை கடவுள்,
கடவுளை எப்படி பார்ப்பதென்று
எங்களுக்கு தெரியும்,
பீட்டா...நீ போடாதே சட்டம்,
இங்கே செல்லாது உன் ஆட்டம்....

பணிந்து போவதற்கு
தமிழனென்ன அடிமாடா....
அடங்கா மாடு....
அடக்கும் மாடு....
தமிழா...
வீட்டுக்குள் பூட்டிய வீரத்தை
பூட்டடா ஏரில்,
தமிழனென்றால் யாரென்று
காட்டடா பாரில்....

எழுதியவர் : பனவை பாலா (18-Jan-17, 5:03 pm)
பார்வை : 177

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே