பெண்மையின்அழகு,நடை, உடை பாவனை

கோல மயில் நீ
கோலமிடும் வேலையிலும்
மறைநதிருக்கும் எனையறிந்த, நின் நாணமதை ,
யான்அறியாமல்,காட்டிடும் பொய்கோபமதை.,காண, நிலவதனை கார்மேக தழுவுவதாய் என் எண்ண தோற்றம்.?
அடக்கிய ஆவலுடன், வெட்கமும் கூத்தாட, சிவந்த நின் கண்ணங்களிடத்தில்
உதித்டும் செங்கதிரை கண்டிடும் ஆம்பலு்ம் தோற்றுவிடும்.!
உன்அழகை மிஞ்ச ஏதுமில்லை என்றிருந்தேன்.
என்னவளாய் ஆனபிண்பு நலிவடைந்த உன்னை ஏறடுத்தும் பாராதிருந்தேன்!
உனையடைந்த கர்வத்தில் உன்குரலுக்கு செவிமடுத்துமில்லை.
அடாது பேசி அடித்ததும் உன்டு!.
தண்மை மாறத தண்ணீர் போல் அன்பு மாறத உண் பண்பில் உணர்ந்தேன் பெண்ணியத்தை!
துன்புறுத்திய யென் துன்பத்தில் யெனை தேற்றும் தேவதையே!
என்னிடத்தில் தஞ்சமடைந்து குலம்காத்து எனையும் காத்தவளே!
பெண்மையின் பேரழகை உரைத்திட மொழிகளில்லை!
ஆருயிரே! பிறிதொரு பிறவி உண்டாகில் உன் மனையாளாய் வாழ்ந்து உன் மடியில் மீளா துயில் பெற வேணடும்!

எழுதியவர் : gksowmiah (19-Jan-17, 8:26 pm)
சேர்த்தது : gksowmiah
பார்வை : 144

மேலே