பழைய பாடல் - புதிய ராகம்

அழகுமலர் சிரிக்கிறதே / அன்பினிலே அழைக்கிறதே /
நிலாமகள் நேரம் நிதமாகுமே /உதயமாகுமே காதலே /
( அழகுமலர் சிரிக்கிறதே ...)

கனவலைகள் கண்களிலே / காளையும் நான் இருந்திடுவேன் /
மதிமுகத்தாள் மனங்குளிர / மரணம்வரை துணைநிற்பேன் /
கனவலைகள் கண்களிலே / காலையும் நான் இருந்திடுவேன் /
மதிமுகத்தாள் மனங்குளிர / மரணம்வரை துணைநிற்பேன் /
கானம்பாடும் காதல் ராகம் / கேட்கும் போதிலே இன்பம் தரும் /
கருவிழியாள் கண்களிலே மலர்ச்சி வரும் /

( அழகுமலர் சிரிக்கிறதே ... )


நினைவலைகள் தொலைகிறதே / நிம்மதியும் போனதுவோ /
நிம்மதியும் போனதனால் / கதறிடுமே என் மனமோ /
நினைவலைகள் தொலைகிறதே / நிம்மதியும் போனதுவோ /
நிம்மதியும் போனதனால் / கதறிடுமே என் மனமோ /
காலைநேரமே கனவு வந்திடும் / வாடுகின்றதே உன்னை எண்ணியே /
உன்மனத்தில் என்நினைவை யார் தந்தது /

( அழகுமலர் சிரிக்கிறதே ...)


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jan-17, 11:33 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 83

மேலே