நாங்கள் வீழ்வோமென்று நினைத்தாயோ

தமிழா ஒன்று கூடி வா!!!!
விவசாய மன்னனின்
அரியணையை மீட்க வா!!!!!
விவசாயின் அரியணை தூணில்
ஒரு தூணை தாங்கி விட்டோம்
ஜல்லிக்கட்டை மீட்டோம்
மீதம் மூணு தூணும்
துணையின்றி கிடக்குது
மீட்கலாம் வா தமிழா!!!!
நிலத்தை மீட்ப்போம் வா!
நீரை மீட்ப்போம் வா!
மழை தரும் மரத்தை மீட்ப்போம் வா!
இந்த நான்கு அரணை அளிப்போம்
நம் நாட்டு விவசாய மன்னனுக்கு
வா தமிழா விரைந்து மீட்ப்போம்
நாளைய சரித்திரம் பேசட்டும்
தமிழகத்தில் விவசாயத்தை
அழிக்க முடியாது என்று!!!!!
ஒவ்வொரு விவசாயின் மரணமும்
சொல்லாமல் சொல்கிறது அவனின் துயரை
இனி மண்ணில் விவசாயின் புன்னகை சிந்தட்டும்
நம் கண்ணீரை துடைக்க,
விவசாயத்தை மீட்க ஒரு கூட்டம் இருக்கிறது
என்ற நம்பிக்கையில்........
விவசாயத்தை காக்க வருவாயா தமிழா?????
புது தமிழகம் படைக்க வருவாயா தமிழா????
நாளை விடியட்டும் ஒரு சரித்திரம்
எம் விவசாயிக்காக..........

விவசாயின் மரணம் இனி நிகழ கூடாது
மீட்ப்போம் தோழா விவசாயத்தை
ஒன்று கூடி விட்டோம்
அனைத்தையும் மீட்ப்போம்
விவசாயின் இன்னலை துடைப்போம்
மதிப்போம் விவசாயத்தை
தவிர்ப்போம் அயல் நாட்டு பழக்கத்தை
கால் பதிப்போம் சேற்றில் விவசாயத்தை மீட்க!!!!!!
விவசாய மன்னனின்
பாதங்களில் சமர்ப்பணம் இவ்வரிகள்......
வாழ்க விவசாயம்!!!!!!
வாழ்க தமிழ்!!!!!!!!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (20-Jan-17, 1:21 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 1158

மேலே