ஜல்லிக்கட்டு

மாடர்ன்க்கு
மாடென்ன தெரியும் என்று
நினைத்தாயோ... !!!

விவேக கைப்பேசி வைத்து
என்ன சாதித்து விடுவீர்கள் என்று
கேட்டிர்களே...
பார்த்துக்கொள்ளுங்கள் எங்கள்
சாதனையை ....

திமில் பிடித்த ரத்தம் எங்களுக்கும்
உண்டு....
எங்கள் வயிற்றுக் கருவும் போராடும்
தமிழுக்கு ஒன்றென்றால் ....

சிங்கத்தை அடக்குவாயா என்று கேட்ட
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் ...
சிங்கத்தையும் அடக்குவோம் ,சிங்கத்தை அடக்குவாயா
என்று கேட்ட உன்னையும் சேர்த்து
அடக்குவோம்....!!!!

கொம்பின் கூர்மை தெரிய வேண்டுமெனில்
என் இளைஞனின் கண்களில்
பார்த்துக்கொள்...

திமிலின் வலு தெரிய வேண்டுமெனில்
என் இளைஞனின் எழுச்சியில்
பார்த்துக்கொள்...

வாடிய என் இனக்காளைகளை வாடிவாசல்
வழியே அனுப்பும் வரை ஓயமாட்டோம் ..

திமில் பிடித்த என் இளைஞனே
திமிருடன் சொல் நான்
தமிழனென்று ..... !!!

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (20-Jan-17, 2:26 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 311

மேலே