படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
![](https://eluthu.com/images/loading.gif)
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஆக்கப் பொறுத்தவர்கள்
ஆறப் பொறுக்காமல்
அடித்து விரட்டினர் !
தரணி முழுவதும்
தமிழர்களை இணைத்தது
காளை !
வரலாறு காணாத
வெற்றி பொறுக்காமல்
வன்முறை !
இன்றும் வாழ்கின்றனர் கோட்சேக்கள்
காந்திய போராட்டம் மீது
வன்முறை !
மாறவே இல்லை
பொதுப்புத்தி
காவலர்களுக்கு !
வாழ்க
நீதி காத்திட்ட நீதி அரசர்
மகாதேவன் !