உன்னோடு நான்
உயிரே உன்னை
என்னில் காண்கிறேன்
ஓவ்வொரு நிமிடமும்....
உன் தீண்டல்களில்
என்னை இழக்கிறேன்
ஒவ்வொரு கணமும்!!!
உன் குறும்புகளில்
சிரிக்கிறேன் நீஎன்னுடன்
இல்லாத வேளையிலும்
என் சேலை
உன் போர்வையாக
இருந்து விடுகிறேன்
எப்போது்ம் உன் அருகில்!!!
இரவுகள் தொடர்கிறது
உன்னுடன் இனிவரும்
பொழுதுகள் தொடர
நினைப்பதும் உன்னுடன்!!!!
சூரியன் சுட்டெரித்தும்
உருகவில்லை உன்நினைவுகள்!!!!
நீங்காத நினைவாய்
நீ என்னுள் கலந்து
நிற்கிறாய் உயிருடன்!!!!
சேலைநுனி அதனை
நீஇழுக்க மேனியும்
சிவக்கிறது வெட்கத்தில்!!!
உன் மூச்சுக்காற்று
பட்டுமலர்ந்து நிற்கின்றன
மங்கையும் மல்லிகையும்!!!
உன் தலைகோதும்
வேளை உறங்கிறாய்நீ
உருகிறேன் நான்!!!!!!!!