நானிலம் போற்றிடுதே

மாணவர் நடத்தும் மாண்புறு வேள்வி
***மண்மிசை தோற்றிடுமோ?
ஆணவ அரசின் அடக்கிடும் போக்கும்
***அவனியில் நிலைத்திடுமோ?
காணவே உள்ளம் கனிவுடன் வாழ்த்தும்
***காளையர் எழுச்சியினை!
நாணயத் தோடு நடந்திட வியந்து
***நானிலம் போற்றிடுதே ...!!!
( 22:01:2017 )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Jan-17, 7:49 pm)
பார்வை : 70

மேலே