ஞானக்கலை - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஞானக்கலை |
இடம் | : திரூவாரூர் |
பிறந்த தேதி | : 23-Jun-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 325 |
புள்ளி | : 110 |
நான் ஒரு கவிதை ரசிகை . எனது ஏழாம் வகுப்பு இல் இருந்து கவிதை எழுதுகிறேன். சோக நேரங்களில் எழுதும் கவிதை எப்போதும் என்னால் மறக்க முடியாத ஒன்று.....
இரு மனங்களின் இணைவில்
ஒரு உறவு பிரியும்
நிலை வந்தால் அதை
பிரிவதா? இல்லை தொடர்வதா?
சில வலிகளை உணர்த்த
வார்த்தைகளும் இல்லை
வலிமையும் இல்லை !
விதியின் பயணம்
முடிந்தால் கூட
நம் காதல் பயணம்
தொடரும்....
விழியோடு பேச
ஜென்மங்கள் போதாது -காதல்
மொழியோடு பேச
வார்த்தைகள் போதாது -என்
ஆசைகளை அளவிட
அளவுகோலும் போதாது -இருப்பின்னும்
விவரித்து விடுகிறேன்
எல்லாவற்றையும் என்உயிரினால்
வானவில்லின் வர்ணங்கள்
தேவையில்லை என்னை
அழகுபடுத்த உன்
விரல் கொண்டு
தீட்டும் வெட்கத்தின்
வர்ணம் போதும்
அடகுக்கடையில் வைக்கப்பட்ட
பொருளாக என்னிதயம்
அவளிடம் மட்டுமே
இருக்கிறது எப்போதும்
நெருக்கம் என்பது காதலுக்கு
அத்தியாவசியமும் இல்லை
புரிதல் என்பது காதலர்களுக்கு
புதிதும் இல்லை -இது
இரண்டும் இருந்தால் கூட காதல்
சில சமயங்களில் ஜெயிப்பது இல்லை
கண்கள் மூடி தவமிருக்கிறேன்
கனவில் உன்னை காண்பதற்கு
கைகள் நீட்டி நிற்கிறேன்
உன் காதலை யாசகமாய் பெறுவதற்கு
இதயம் திறந்தே வைக்கின்றேன்
எப்போதும் உன் நினைவுகளை பெறுவதற்கு
இமைகள் மூட மறுக்கிறேன்
இடைவிடாமல் உன்னை ரசிப்பதற்கு
உயிரை உணவாய் வைக்கின்றேன்
உருகும் முன் உணைவந்து சேர்வதற்கு
கால்கள் வலிக்க நிற்கின்றேன்
உன் கால்பட்ட இடத்தில
என் பாதம் பதிக்கலாம் என்று
அதிகாலை வேலை பூத்துநிற்கிறேன்
அந்திமாலைகுள்ளாவது நீ என்னை
பார்ப்பாய என்று
வாசல் கடக்கும் நேரமெல்லாம்
வானிலை போல மாறி நிற்கிறேன்
உன் வருகையின் போது
சித்தரித்த சித்திரங்கள்
எல்லாம் சிரித்துகொண்டு
சொல்கின்றன உன்
என்னவளை விடவா
நாங்கள் அழகு என்று
திமில் கொண்ட
காளைகளை திடம்
கொண்டு கையாளும்
வீரம் தமிழனுக்கே
உரிய தனித்துவம்!!!!!!!!!
வீரத்தின் அடையாளத்தை
வென்று எடுப்போம்
வீரியம் மிகுந்தவன்
தமிழன் என
உனக்கு புரியவைப்போம்!!!!!!!!
நான் இறந்தபின்
என்னை எரித்து
விடாதீர்கள் ! ஏனெனில்
என்னவள் என்
இதயத்தில் குடிஇருக்கிறாள்!
நண்பர்கள் (19)

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்

மீனா
chennai

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி
