காதல் சாசனம்
கண்கள் மூடி தவமிருக்கிறேன்
கனவில் உன்னை காண்பதற்கு
கைகள் நீட்டி நிற்கிறேன்
உன் காதலை யாசகமாய் பெறுவதற்கு
இதயம் திறந்தே வைக்கின்றேன்
எப்போதும் உன் நினைவுகளை பெறுவதற்கு
இமைகள் மூட மறுக்கிறேன்
இடைவிடாமல் உன்னை ரசிப்பதற்கு
உயிரை உணவாய் வைக்கின்றேன்
உருகும் முன் உணைவந்து சேர்வதற்கு
கால்கள் வலிக்க நிற்கின்றேன்
உன் கால்பட்ட இடத்தில
என் பாதம் பதிக்கலாம் என்று
அதிகாலை வேலை பூத்துநிற்கிறேன்
அந்திமாலைகுள்ளாவது நீ என்னை
பார்ப்பாய என்று
வாசல் கடக்கும் நேரமெல்லாம்
வானிலை போல மாறி நிற்கிறேன்
உன் வருகையின் போது