வாராயோ மா மழையே நீ வாராயோ
வானம் இல்லை
மேகம் இல்லை
கடல் நீரும் இல்லை
காடும் இல்லை
இது என்ன மழை
இதுதான் ஏழை
விவசாயி கண்ணீர் மழை
இந்திரனை வேண்டி
வாடிய தன பயிர்களைக் காக்க
பாலை நிலத்தை நனைத்திட
மழைக்காக வேண்ட
மழையும் வராததால்
வேறு வழி தெரியாது
ஏங்கி ஏங்கி அழுகிறான்
அதுவே இந்த மழை
இந்திரனே இரங்காயோ
மனம் இரங்காயோ
இந்த மழைக் கிறங்கி
அந்த மழைப் பொழியாயோ
வாராயோ மாமழையே
இந்த ஏழை உழவற்கு
கை கொடுத்து காப்பாற்ற
வாராயோ
மா மழையே நீ வாராயோ
காயும் பயிர்களை காப்பாற்ற
நீ வாராயோ
இந்த பாலை நிலங்களுக்கு
நீர் தந்து உயிர் தாராயோ
மா மழையே !