மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு
சலங்கை சத்தம் ஒலியிலே ;
சகோதரத்துவம் தலையுதே !
சாதி சமயம் பிறிவினில் ;
சச்சரவும் மறையுதே !
விளையாட்டுக்கு ஒரு விழா !
வீதியெங்கும் திருவிழா !
எங்கள் வீட்டு காளையை -
எதிரியாக நினைக்கல !
போட்டி வைத்து ஆடுவோம் !
பொங்கலென்று போற்றுவோம் !
கொம்பு சீவி பார்க்கிறாய் !
கொக்கரித்து சிரிக்கிறாய் !
எதிர்க்க நீயும் யாரு ?
எதிர்ப்பவன் கதியை பாரு !
வீரம் விளைந்த மண்ணடா !
வித்தை ஒன்றும் இல்லையடா !
மண்ணெல்லாம் மனக்குமே எங்கள் -
மனமெல்லாம் பறக்குமே !