ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு என்று நினைத்தாயோ
ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு என்று நினைத்தாயோ?
அப்படி நீ நினைப்பாய் என்றால்
கேட்டு கொள்...
ஆம் அது ஒரு விளையாட்டு தான்
காலம் காலமாய் எந்தன் பாட்டனும் முப்பாட்டனும்
அவன் உடன் பிறவா காளைகளுடன் விளையாடும் விளையாட்டு
வருடம் முழுதும் உழுது களைத்து
இளைப்பாற, மனம் குதூகலிக்க
அவன் விரும்பி விளையாடும் விளையாட்டு
காளைகளை காட்சி பொருள் ஆக்கினாய்
அதை பெருமை என மார் தட்டினாய்
படிப்பின் வாசனை அறியாத போதிலும்
என் பாட்டம் காளையை உறவாக்கினான்
அதை கதாநாயகனாய் பாவித்து
ஜல்லிக்கட்டை உருவாக்கினான்..
காளைகளை துன்புறுத்தும் பொருட்டே இவ்விளையாட்டு என்று
ஏட்டு அறிவை கொண்டு பிதற்றும் நீ
முடிந்தால் எம் மண்ணை மிதித்து பார்
எங்கள் காளையின் கொன்பிலேனும் ஒரு கீறலை போட்டுவிட்டு
உன் உதிரம் சிந்திறாமல் திரும்பி பார்
அப்படி திரும்பினால்
என் தமிழன் மறித்தான் எனும் மகிழ்வோடு
எத்தகைய சட்டத்தையும் நீ இயற்றி கொள்..!!!!
- தமிழ் இனத்தில் ஒருவனாய்