இவள் தான் என் முத்தம்மா
மெய்யாலும் கண்ணே
மஞ்சள் பூசிய உன் முகம்
சொக்க தங்கம்போல ஜொலிக்குதடி
மெய்யிட்ட உன் கண்ணிரண்டும்
பொன்வண்டுபோல மினுமினுக்கதடி
சிவப்பு மூக்குத்தியிலே ஆத்தே நீ
அந்த எல்லை அம்மனைப்போலவே
என் கண் முன்னே நிக்குறே
உன் நீண்ட காதுகளில் அந்த
வெள்ளைத் தோடுகள் ரெண்டும்
ஒளி தந்து என்னை உன் பக்கம்
சும்மா இழுக்கதடி
உன் தங்க மேனியை மறைக்கும்
சிற்றாடையும் ரவிக்கையும்
உன் அழகிற்கு அழகு சேர்க்குதடி
உன் நீண்ட கைகளில்
கண்ணாடி வளையல்கள் உன்
அசைவுகளில் ஜல் ஜல்லென்று
சித்தருவி ஓசை எழுப்புதடி
அன்னமே நீ அசைந்து அசைந்து
வகையிலே கால் சலங்கை இரண்டும்
யாழ் இசைத்தந்து என் மனசை
உன் மனசோடு ஒன்று சேர்க்குதடி
கண்ணே என் முத்தம்மா
நீ தான் என் சித்தத்தில்
என்றும் என் சொந்தம்மா
இந்த நளனுக்கு அமைஞ்ச
தமயந்தி அம்மா