அவள் வருவாளா

நிமிடத்துக்கு என்பது முறை
அவள் பேரை சொல்லி துடிக்கும்
என் இதயத்தை காணவில்லை

24 மணிநேரமும் அவளையே நினைக்கும்
என் நினைவை காணவில்லை

முப்போழுதும் அவளையே
கண்டு ரசிக்கும்
என் கண்களை காணவில்லை

என்னுயிர் காதலி
அவளின் பிரிவால்
என் புலன்களை இழந்து
நடைபிணமாய் வாழ்கிறேன்
மீண்டும் என்னுள் வருவாளென்ற கனவோடு..

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jan-17, 9:22 pm)
பார்வை : 229

மேலே