தேடுகிறேன்

அதிகாலை வேளையில்,
பனிபொழியும் சாலையில்-உன்
முகத்தைப் பார்க்கவே - நடை
பயணம் செய்கிறேன்...!

உன் மூச்சுக்காற்றினை - என்
காதல் சுமந்திடும்..
நீ நடக்கும் பாதையில்
என் இதயம் படர்ந்திடும்...!

வெகுநேரம் மூச்சிரைத்தேன்,
வேகமாய் நடக்காதே!!
தாகமாய்த் தவிக்கிறேன்,
நீர் அருந்த மறந்தாயோ??

நீ அங்கு சிரித்திருந்தால்
என் கன்னம் சிவந்துவிடும்!!
அழக்கூட நினைக்காதே,
என் இதயம் நொறுங்கிவிடும்...!

எங்கு நீ சிரிக்கிறாய்?
எங்கு நீ நடக்கிறாய்? - உன்
பாதம் வருடவே
கைரேகை துடிக்குதே...!

நோயாளி ஆகிவிட்டேன்,
மருந்தாக நீ வரவே!!
சூரியனாய் மாறிவிட்டேன் - காதல்
பனிப்பூவாய் நீ உருக!!!

எழுதியவர் : விக்னேஷ் ச (31-Jan-17, 11:15 am)
Tanglish : thedukiren
பார்வை : 97

மேலே