விழுதை நோக்கி வேர் விடும் தூது

விழுதை நோக்கி வேர் விடும்
பாசத்தின் தூது !



உனக்கு வார்த்த மீதித் தண்ணீர் ஓடி
கிணற்று வாக்கில் நின்ற கமூகு கூட
ஓங்கி வளர்ந்தின்று நல்ல பயன் தருகிறது

ஒக்களையில் தூக்கி
வக்கனையாய் வாய்க்கு ருசி பார்த்து
ஒன்ற விட்ட நாள் முதல் எண்ணை தடவி
குளிப்பு முழுக்கு முதல் கொண்டு உன்
அழுகுரலுக்குமுன் நின்று வளர்த்தெடுத்த சீமாட்டி,

என் மடி மீது தாலாட்டி
குட்டிக் கதை சொல்லி அமுதூட்டி
தகதகவென நீ வளர்ந்த பூரிப்பில்
என்னை மறந்திருக்க ...

மீசையரும்பிய வேளை
ஆசை யரும்ப வானேறிய பிள்ளை
பாசமரும்ப வருவான் வருவானேன
ஆசையுடன் காத்திருக்க
மீண்டு வரா தேசம் புகுந்தான் காண்.

மாண்டு விடும் நேரம் நெருங்கமுன்
கண்டு விடும் ஆவல் பொங்க காத்திருக்கிறேன்.
கொண்டுவா இறைவா ஒருக்கால், என்முன்.
புண்ணியம் உனக்கேயாக ஏரம்ப மூத்தியானே!

வாக்குமாறிய போதும்
போக்கு மாறா பூ,க்கும் மரம் !
காக்கும் தெய்வம் காவல் செய்த போதும்
நோக்கும் ஆசை போக்கும் துன்பம்
கேக்கும் நேரம் கேக்கும் காலம்

விழுதை நோக்கி வேர் விடும்
பாசத்தின் வாசம் !
வீண் பொழுதை கழித்திடும்
விழுத்துக்கு வீசுமா ?


இணுவையூர் சக்திதாசன் 31/01/2017

எழுதியவர் : இணுவை யூர் சக்திதாசன் (31-Jan-17, 1:18 pm)
சேர்த்தது : இணுவை சக்திதாசன்
பார்வை : 45

மேலே