செய்வாயா

கண்கள் தானே?
கணைகள் அல்லவே?
தொட்டாலே தொலைவேன்.
தொடுத்தால் என்செய்வேன்?
ஒரு தேக்கரண்டி இரக்கம்??

உன் பொலிவின் விளிம்பில்,
களித்து நின்றேன்!
உன் செவியின் வரும்பில்,
வதைந்து போனேன்!
மீட்பாயா??

உன் இதழின் சுழிப்பில்,
சுழன்று சென்றேன்!
உனை ரசிப்பதிலேயே
பிழைபல செய்தேன்!
மன்னிப்பாயா??

வருணிக்க மொழியில்லை,
இசைக்க ஒரு சுவரமில்லை,
கற்பனை செய்தேன்-
அதிலும் அதிர்ஷ்டம் இல்லை!
நீயே (என்) பிரபஞ்சமோ??

எழுதியவர் : விக்னேஷ் ச (31-Jan-17, 2:04 pm)
பார்வை : 137

மேலே