கொம்பு வச்ச சிங்கத்த தான் மீட்டெடு

விழித்தெழு தோழா,
விடைதேடு தோழா !
காயப்பட்டாலும்
உடன்வர யாருமில்ல,
கலாச்சாரம் பாதுகாக்க
கட்சி பணிக்கோ நேரமில்ல!
தடையுத்தரவு
வாங்கியவனே -தமிழன்
கண்ணீர் வீணில்லையென,
தடுமாறி நிக்கின்றான்!
தடையுடைப்போம்
என்றவனெல்லாம் -தல
காட்டாம ஒடுங்கிவிட்டான்!
கையேந்திப்
பிழைப்பவனோ,
காக்கிசட்டை
மாட்டிகிட்டான்!
வாடி வாசல்
வீதியறியா
வழக்கு வீர
விளையாட்டு வேணாங்குறான்!
முப்பது நாளில்
முளைத்தவனெல்லாம்,
முட்டு கட்டையா
நிக்குறான் !
முப்பதாயிரம் முன்
தோன்றியவனெல்லாம்
முடங்கிப்போய்
நிக்குறான்!
ஆடையை
அவிழ்ப்பவளுக்கோ,
ஆண்டின் சிறந்தநபர்
பட்டம் வழங்குகிறான்!
காளையை
அவிழ்த்துவிட்டு வீரத்தை
காட்டவோ அம்புட்டுபேரும்
நடுத்தெருவுல நிருத்துறான்!
காமத்தின்
பிடியிலே கைகலப்பு,
கலைக்கூத்தாடியின் பிடியிலே
நாட்டுநடப்ப
சூட்சமும் வஞ்சகமும்
சூழ்ந்து விட்டது,
கொம்பு வச்ச
சிங்கத்த தான் மீட்டெடு!
விழித்தெழு தோழா,
விடைதேடு தோழா

ச. சோலை ராஜ்

எழுதியவர் : (31-Jan-17, 2:30 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 61

மேலே