ஏக்கமும் தாக்கமும்

தூரல் போடும் சாலை- அது
அந்தி சாயும் வேளை...
கீரல்பட்ட மனமாய் என்னைக்
கண்டுகொண்ட மாலை!!

பார்வை பட்ட கனமே,
பறந்து போனதென் மனமே...
பாவை கரங்கள் சேர-பல
தவங்கள் புரியுமென் இனமே!!

வாழும் நாட்கள் ஒருகனமானது
உன்னைப் பார்த்ததுமே!
காடும் மலையும் கடுகளவானது-நீ
என்னுள் நுழைந்ததுமே!!

பேச்சும் மூச்சும் ஓய்வறை சென்றன
உன் குரல் கேட்டதுமே!
இதயம் துடிக்கும் இருமடங்காக
உன் நிழல் பார்த்ததுமே!!!

இமைகளின் துணையால்
என்னை வதைப்பது தகுமோ??
கண்களின் மொழியால்
என்னை சிதைப்பது முறையோ??

உன் நெற்றிப் படுக்கை மீதிலே
என் இதழ்கள் உறங்க முடியுமோ??
உன் கண்ணம் சிவக்கும் பொழுதிலே,
நான் வருடிக்கொடுக்கக் கிடைக்குமோ??

உன் மடியில் உறங்க முடியுமோ,
சில நொடிகள் உன்னுடன் கிடைக்குமோ??
நம் நினைவுகள் குழைத்து
அமுதங்கள் இழைத்து-பல
யுகங்கள் வாழ நடக்குமோ????

எழுதியவர் : விக்னேஷ் ச (31-Jan-17, 2:46 pm)
பார்வை : 91

புதிய படைப்புகள்

மேலே