உன் வசியத்தில் நான் ❤
அவள் சினுங்களில் என் ஆண்மை
சிக்கித்தவிக்குமே
செவ்விதழில் சொர்க்கமே சொக்கிபோகுமே !!
அவள் நடையில் நெற்பயிரும் நெஞ்சைத்துலைக்குமே
உடையிலோ என் உள்ளம் ஊஞ்சலாடுமே !!
அவள் கையசைத்தால் கடைவீதியும் காலடி கிடக்குமே
கண்ணிமைத்தால் என் கர்வமும் கரைந்துபோகுமே !!
அவள் கன்னங்களில் என் எண்ணம் எல்லை சீருமே
அவள் பின்நடக்க என் கால்கள் பேச்சைமீறுமே !!
அவள் வட்ட பொட்டில் வெண்ணிலவோ எட்டி பார்க்குமே
_எட்ட போக என் இதயம் ஏங்கிவாடுமே !!
அவள் தெத்துபல் சிரிப்பில் என் கோவம் செத்துபோகுமே
அவள் முத்தத்தில் சீனிஆலையோ சீரிபாயுமே !!
மொத்ததில் என் அகிலமும் அவளில் ஆட்கொள்ளுமே
அவள் பின்னழகில் அண்டமும் சுழன்று வீழுமே !!!
❤❤ வசிகரி ❤❤
_கிறுக்கி