History Repeats
தற்கால உலகில் நுழைய விரும்பும் ஒவ்வொருவரும் இறந்த கால கதவுகளை திறந்தே ஆகவேண்டும்.
அவ் இறந்த கால கதவுகளை வெற்றிகரமாக திறந்து காலடி வைத்து நடந்து கொண்டிருப்பவர்களாலேயே; எதிர்கால உலக போக்கை எதிர்வுகூற முடியும்.அக்கதவை அடையாதவர்களோ கால வெள்ளத்தில் சருகுகளாய் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்த இறந்த கால கதவுகள் தான் வரலாறுகள் என அழைக்கப்படுகின்றது என்ற எதார்த்தம் எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாய் எமக்கிடையில் இன்னும் ஒழிந்து தான் கிடக்கிறது.
இந்த வரலாறுகள் இருக்கிறதே அது; ஒரு அழகான காலம் சொல்லி அது நேற்றைய பொழுதின் இன்றைய கண்ணாடி;அது நிகழ்காலத்தின் நேற்றைய பொழுது;அது நாளைய பொழுதின் இன்றைய ஒத்திகை என ஆழமாக நோக்கலாம்.
நேற்றய வரலாறுகளை துல்லியமாக அறிந்து கொள்ளாமல் நிகழ்காலத்தையே சரிவர விளங்க முடியாது என்றிருக்க எதிர்காலத்தை எதிர்வுகூற நினைப்பது கானல் நீரில் வலை வீசுவதைப் போன்றதாகும்.
வரலாற்றின் வீதியில் பவணி வரும் போதுதான் நேற்றய நிகழ்வுகள் இன்று மீட்டப்படுவதையும் நாளைய நிகழ்வுகள் படிப்படியாக படியிறங்குவதையும் உணர்ந்து கொள்ளமுடியும்.
இருந்த போதிலும் மேற்கத்தைய உலக பல்லாயிரக்கணக்கான வரலாற்று ஆய்வாளர்களும் நிபுணர்களும் வரலாற்றை அலசி ஆய்வு செய்து வியூகங்களையும்,எதிர்கால எதிர்புகூறல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்னினாலும் அவ்வலையில் மீன்கள் சிக்கியதாக இல்லை அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்து வருகிறது.
ஏமாற்றமடைபவன் ஏமாற்றத்திற்கு பழகிக் கொள்கிறான் அல்லது ஏமாற்ற பழகிக் கொள்கிறான்.ஆனால் இவர்கள் ஒரு படி மேலாக ஏமாந்து கொண்டு எம்மையும் ஏமாற்ற நினைக்கிறார்கள்.
அவர்களின் ஏமாற்றத்திற்கு காரணம் வரலாற்றை பிழையான எண்ணக்கருவைக் கொண்டு வடிவமைத்திருப்பதும் வரலாற்றை இடம்தெரியாது தேடிக்கொண்டும் இருப்பதுமாகும் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே தெரிந்த தாரக மந்திரமாகும்.
வரலாற்றை மேற்கத்தேய வரலாற்றாசிரியர்கள் குரங்கில் இருந்து மனிதன் வந்ததாக சித்தரித்து அதற்கான கட்டுக்கதைகளை ஆய்வுகளாக அலங்கரித்து காபன் 14 யின் அனுமாணத்தை ஆதாரமாய் கொண்டு எலும்புக்கூடுகளிலும்,கல்வெட்டுக்களிலும்,கட்டிட இடிபாடுகளிலும்,பீங்கான் கோப்பைகளிலும்,செல்லா நாணயங்களிலும் பொறக்கி எடுத்து எழுதியுள்ளனர். இதனால் தான் மூஸா(அலை) அவர்களை வரலாற்றில் வாழ்ந்ததாக அவர்களால் அறியமுடியவில்லை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் பாவம் இன்னும் ஆதார பூர்வமான கட்டுக்கதைகள் அதாவது ஆய்வுகள் கிடைக்கவில்லை போலும்
இறந்த காலத்தையே இருளில் தேடித் தட்டுத் தடுமாறும் இவர்கள் உலகிற்கு வழி காட்ட முடியுமா? இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று அவர்கள் அறிவதே பெரும் வெற்றி அல்லவா?
"நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு"(அல்குர்ஆன் 3:62)
"நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்."(அல்குர்ஆன்: 12:3)
நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 12:111)
மேலும் எம்முடைய எதிர்கால யுத்த வெற்றி,தொழில்நுட்பம்,சர்வதேசம் ஆட்சி என்பன வஹி மூலம் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டது எமக்கு எதிர்காலத்தை கணிக்க வேண்டிய தேவையும் கிடையாது.எம் இறந்த கால வரலாறு மற்றும் தற்காலதொழில்நுட்பத்தைக் கொண்டு நிகழ்காலத்தை துல்லியமாக பிடித்துக்கொண்டாலே எதிர்கால வெற்றியை அடைய நாம் எவ்வாறு வாழ வேண்டும்? நாம் எவ்வாறு அந்த வெற்றியை நோக்கி நகர வேண்டும்? எம்முடைய கிலாபத்தை நிலைநாட்ட நம்முடைய பாத்திரம் என்ன? என்ற எதிர்கால முடிச்சுக்களை வரலாற்றுச் சிக்கில் இருந்து அவிழ்த்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் எமக்கு எதிர்கால முடிச்சுக்களை இலகுவில் அவிழ்கக் கூடிய வழிகளை திறந்து தந்து அதில் எம் பாத்திரத்தை அறிந்து அதற்கேற்ப எம் உலக வாழ்க்கையை ஆக்கிக் கொள்ள அருள்புரிவானாக