இன்றைய கல்வியின் காவலர்கள்

மாணவர்கள் கல்விக் கூடங்களை குறை கூறுவதும் கல்விக் கூட பீடாதிபதிகள் மாணவர்களை குறைகூறுவதும் இரவு பகலை தொடர்வதைப் போல் முடியாத முடிவிலி

வாத பிறதிவாதங்கள் அவ்விடயத்தை வலுவிழக்கவே செய்யுமே ஒழிய தீர்வுகளையோ முன்னேற்றத்தையோ ஏற்படுத்தும் என்பது காணல் நீர் போன்றது தூர இருந்து பேசிக் கொண்டே இருக்கலாம் பெற முடியாது.

அரசியலால் முடிவு காண நினைப்பது அறிவீனத்தின் அடையாளம்;
வளர்ச்சியோ வீழ்ச்சியோ அவர்களை வளப்படுத்தி வளர்ப்பதாகவே அது அமையும்.
இந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்களே;
கல்வி வளர்ச்சி கண்டால் தன்னால் தான் என்று நெஞ்சை நிமிர்த்துவார்கள்.
வீழ்ச்சியுற்றால் தன்னால் தான் முன்னேற்ற முடியும் என்று மாய வார்த்தைகளை வீசி மக்களை மயக்குவார்கள். கடைசியில் கட்டிடத்தை காட்டி கண்ணை கட்டிவிடுவார்கள்
.
வழமை போல் மார்கழி மழைக்கு முளைக்கும் காளான்காய் கல்வியின் காவலர்கள் முக புத்தகத்தில் பூப்பார்கள்; தேர்வு முடிவுகளைக் கொண்டு அறிக்கைவிடுவார்கள்; கல்வி கூடங்களையும் ஆசிரியர்களையும் அடித்து நொறுக்குவார்கள் பின் பங்குனி வெயிலுக்கு மங்கிப் போய்விடுவார்கள்.
இச்சுழற்ச்சி மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்....
1.வரலாற்றை அறியாதவரை
2.மறுமலர்ச்சி எவ்வாறு உருவாகும் என்பதை உணராதவரை
3.அது யாரால் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற திசை புரியாதவரை
4.வரலாற்றை கொண்டு நிகழ்காலத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய, காரணிகளை அலசி ஆய்வு செய்யக்கூடிய ஆய்வாளர்கள் உருவாகாத வரை,,,,,,,,,,,

எழுதியவர் : Hasni Hamed (3-Feb-17, 1:12 am)
சேர்த்தது : ஹஸ்னி ஹமத்
பார்வை : 4395

மேலே