சல்லிக்கட்டு விளையாட்டு அல்ல

தமிழ் இனி மெல்லச் சாகும் போய்,
தமிழ் இனம் இனி மெல்லச் சாகும் வந்தது போல் ஒரு பிரம்மை.
கிடைக்கப் பெற்றவர்கள் பெருக்கி கொண்டே இருக்கிறார்.
அடைக்கப்பட்டவர் அடைந்து கொண்டே செல்கிறார்...
பொறிக்க வைத்தக் குஞ்சை காக்கத் தவறிய பொறுக்கிகளை புறந்தள்ளிவிட்டு,
பொறுக்கப்படாத முத்துக்கள் போர்க்களம் சென்றிருக்கிறது
பொறுமையை இழந்து!!


அடடா அடடா!!!
வாட்சப் இல் வாய் கொப்பழிக்கவும் facebookil முகம் கழுவவும் மட்டுமே
எங்களுக்கு தெரியும் என்ற ஈனப் பெரியோர்களுக்கு மத்தியில்,
சீறிப் பாய்ந்த சிங்கங்களை கண்டு உலகமே வியக்குதடா! தமிழா!!!
கையில் ஒரு காளையையும், வயிற்றில் ஒரு காளையையும் சுமந்து கொண்டு
சரித்திரம் படைக்க நிற்கிறாள் வீரத் தமிழச்சி,
கற்பிக்க பட வேண்டிய எம் இளம் தலைமுறையினர் இன்று
கற்றுக்கொடுக்க வீதியில் இறங்கிவிட்டான்!! கற்றுக்கொள் கற்றுக்கொள்!!! தவறில்லை...


கவிபாடும் என்று நினைத்த குரல்கள் இன்று காவியம்பாட துவங்கிவிட்டது...
இன்னும் எத்தனை நாட்கள் இவனும் குனிந்து கொன்டே செல்வான்....

குத்தியவர்கள், எங்கள் உடம்பில் குத்தி இருந்தால் பரவாஇல்லை, உரிமையில் குத்தி விட்டனர்..
கன்று ஈன்றபின் மாட்டின் தொப்புள் கொடியை திண்றால் கண்றுக்கும் தாய்க்கும் ஆபத்து என்ற
தமிழன் மரத்துக்கு உரமாய் அளித்தவன்...
அவன் மரபை நீ கேலி செய்கிறாய்... பாவம்..
தமிழனின் வரலாறு படித்துப்பார் உன் மரபணுவும் வெட்கப்படும்....
மாட்டின் திமிலை பிடித்து வளர்ந்த எங்களுக்கு இன்னும் திமிர் குறையவில்லை மறந்துவிடாதே....
மண்டியிடதா மானமும்....வீழ்ந்து விடாதவீரமும் நாளை வெல்லும்....
வென்றப்பின் விசில் பறக்கும் வேடிக்கை மட்டும் பார்.....

நன்றி,
வால்மீகி.

எழுதியவர் : வால்மீகி (4-Feb-17, 6:27 pm)
சேர்த்தது : valmeehi rajan
பார்வை : 148

சிறந்த கவிதைகள்

மேலே