கவிதை

அன்பு மொழியே !
அழகு மொழியே !
அற்புத மொழியே !
இன்னிசை தமிழே !
இயற்றமிழ் அழகே !
இன்பச் சுவையே !
இலக்கிய நயமே !
வர்ணிக்கும் கவிதைக்கும்
அழகிய கவியாய்
கவிதையென பெயரிட்டாயே !
கவியை போற்ற
கவிஞனுக்கு இசைந்தவளே !
நின்னை போற்ற
கவிஞனும் இசைப்பானே !