வாக்கு பொய்க்காது

விவேகானந்தரின்
வாக்கு பொய்க்காது,
விவேகம் எம்மிடம்
என்றும் விலகாது!
வாய்மையே வெல்லும்
என்பது நீதி,
இந்த வாயில்லா
ஜீவனுக்கு ஏன்
அநீதி!
தீண்டாமையை
தள்ளி வச்சுட்டோம்,
பீட்டா குத்தான்
புள்ளி வச்சுட்டோம்!
கொள்ளி வைக்காம
கொள்கை விடமாட்டோம்,
கொன்று குவித்தாலும்
பீட்டாவை விடமாட்டோம்!
ச்சீய் பெப்சி,
கொக் கொக் கோலா
வேரறுப்போம்,
விற்பனைக்கு வந்தா
விரட்டித்தான் அடிப்போம் !
சபதம் வெல்லாம
சரியமாட்டோம்,
சத்தியமா எவனையும்
இனி தலைவனாக்க மாட்டோம்!!

எழுதியவர் : ச. சோலைராஜ் (3-Feb-17, 7:16 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 103

மேலே