நுகர்வோர்

நுகர்வோர்
காசு கொடுத்து பெறுவோரே
கண்ணியமான நுகர்வோராம்
வாங்கிய பொருட்கள் யாவையுமே
நுகர்வோரின் நுகர்பொருளாம்
பார்த்து பார்த்து வாங்கிடனும்
பாதகம் வராமல் பார்த்திடனும்
நியாய விலையை கண்டிடணும்
வாயின் விலையை முறித்திடனும்
தரமெனும் முத்திரை பலயிருக்கு
தவறாமல் பார்த்து வாங்கிடனும்
முத்திரை இல்லா பொருட்களையெல்லாம்
முழுமையாக தவிர்த்திடனும்
தரத்தினை பார்த்து பெறுவது
நுகர்வோரின் உரிமையாகும்
தரமாக வழங்குவதே
வியாபாரியின் கடமையாகும்

எழுதியவர் : சே.மகேந்திரன் (4-Feb-17, 6:35 pm)
சேர்த்தது : smahendhiran
பார்வை : 54

மேலே