இயற்கைப் பாடல்
![](https://eluthu.com/images/loading.gif)
மழைக்கால மேகம்
தவழ்ந்தாடுதே
மலைமீது மோதி
வழிந்தோடுதே
குளிர்கண்டு மாலையில்
மயில் ஆடுதே
அந்திமழை வேளையில்
குயில் பாடுதே
ஏகாந்த நேரம்
கனை போடுதே
ஏற்காட்டுப் பூவினம்
எனைத் தேடுதே
கூட்டிற்குள் பறவை
தினம் கூடுதே
வீட்டிற்குள் உறவோ
பணம் நாடுதே