ஒரு நாள் இரவு
![](https://eluthu.com/images/loading.gif)
மல்லி மொட்டு விரியும்
அழகிய மாலை !
தன் நிறம் மாறும்
பொன்னிற சூரியன் !
வானெங்கும் சலசலக்கும்
சின்னஞ்சிறு பட்சிகள் !
தென்னங்கீற்றில் ஊடுருவி வரும்
தென்திசை காற்று !
பூவாசலை எட்டி பார்க்கும்
வெள்ளி மகள் !
மேனி மறைத்து நாணிக்கொள்ளும்
மூன்றாம் பிறை !
இயற்கை அழகை ரசிக்க
விசால திடல் !
நேரம் கழிக்க கையில்
சோளக் கல்லை !
இருளின் தனிமை போக்க
ஆகாஷவானி செய்தி !
மேனி சிலிர்க்க வைக்கும்
ஊத காற்று !
நேரம் பார்த்து இசைத்திடும்
ராஜாவின் கீதம் !
எங்கோ அழைத்து சென்றிடும்
எண்ண அலைகள் !
உறங்காத விழிகளும் உறங்கிடும்
இரவின் மடியில் !
இதுபோல் கிடைத்திட வேண்டும்
ஒருநாள் இரவு..........!