விடியல் --- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
விடியலை நோக்கி விரைந்திடும் நெஞ்சம்
படிகளும் ஏறிப் பயணமும் செய்யும் .
விடியலின் காலை விடிவெள்ளி பார்க்க
மடிதல் வராது மனமும் சிறக்க
கடிதில் எழுவாய் கதிரவனே எங்கும்
வடிவாய் உயிர்ப்பாய் வரவு .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்