நீயென்ன பெரிய அழகியா

நீயென்ன பெரிய அழகியா?

அழகின்,
இலக்கணம் முழுதும்
உன் பெயர் கொண்டதால்!

வகிடு,
நதிகளின் ஓட்டம்
நினைவில் தருவதால்!

கண்வழித் தூண்டில்,
பிரபஞ்சம் முழுதும்
படர்ந்து செல்வதால்!

இதழ்கள்,
வானவில் மடித்த
உருவம் கொள்வதால்!

கன்னம்,
இலவம் பஞ்சுக்கு
சவால் விடுப்பதால்!

பாதம்,
நிலவின் வழக்கம்
தானே செய்வதால்!

நீயென்ன பெரிய அழகியா???

எழுதியவர் : விக்னேஷ் ச (6-Feb-17, 2:57 pm)
பார்வை : 190

மேலே