உயிரே உனக்காக

நான் சந்தித்தேன்
முதல் உன் கண்
பதிப்பில்
பாதித்தேன் என் மனம்
ஒரு நொடியில்...

தேடினேன் காதல்
உன் கண் அழகில்
வாடினேன் உன்
அழகொளியில்
உயிர்த்தெழுந்தேன்
உன் குரலொலியில்....

காதல் சொல்ல பலயுகமாய்
சுற்றிவந்தேன் தினம் தினமாய்
பலவந்தமாய் என் நினைவில்
பற்றிவந்தாய்
பக்குவமாய் நான் காதல்
கூற.....

பதறினாய் நாணத்தோடு
இதுதான் பெண்மையா
மென்மையில் என்அன்பு பிழைக்குமா
உன் பதிலில் என் வாழ்வு தழைக்குமா....

என் உண்மை காதல்
உடனே பலிக்குமா
உன் குரலில் என்
பெயர் ஒலிக்குமா
என் நிலை புரிவாயா....

உனக்காக மனம் ஏங்கும்
நிலை அறிவாயா
தினம் நான் இறக்கும் கணம்
கண்பாயா
என் நினைவு உன்னை சுற்றும்
காதல் இதுதானா....

என் நினைவு உன்னோடு
உயிரும் உன்னோடு
இல்லை என்றால் இந்த உயிர்
மண்ணோடு...

பதிலில் மீதி வாழ்க்கை
இல்லை என்றால்
ஜென்மம் தொடர்வேன்
உனக்காக
உயிரையும் தருவேன்
என் உயிரே உனக்காக...

எழுதியவர் : சிவசக்தி (6-Feb-17, 2:37 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : uyire unakaaga
பார்வை : 1239

சிறந்த கவிதைகள்

மேலே