காதலிக்க நேரமில்லை - புதுக்கவிதை

உறங்க நினைக்கிறேன்
உறங்க முடியவில்லை .
இமைகள் மூடியும்
இதமான நினைவுகள்
இரவின் மடியில்
விழித்துக் கொள்கின்றன .
காதலிக்க நேரமின்றி .


கனவில் கவிதை வடித்தேன் .
நனவாய் உன்னை நினைத்தேன் .
மனநோய்க்கு ஆளானேன் .
மௌனமாக நிற்காதே .
நேரம் எனைக் கொல்ல
நிம்மதியை நானிழக்க
காதல் பற்றிக் கொண்டதே !


வானம் பூமி எல்லாம் தேடிப் பார்த்தேன்,
உன்னைக் காணவில்லை தோற்றேன்,
உயிர் கூச்சல் போடக் கேட்டேன்,
என் விதியை திட்டித் தீர்த்தேன்,
இருந்தாலும் நீ வர காத்திருப்பேன் !!!



காற்றும் பூவும் உன்னை போல இருக்க,
தினம் என்னை நானே வெறுக்க,
முடியவில்லை உன்னை மறக்க,
இது யார் செய்த பிழையோ,
இப்படி இருப்பது தான் என் நிலையோ..?? !!!



சுவரில்லாதச் சித்திரமே !
சுவர் கடியாரம் கூட வேகமாக
சுற்றுகிறது . அதற்கும் நேரமில்லை .
நேரமின்றி நான் நோக
காதலுமே வாட்டுதடி !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Feb-17, 4:03 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 128

மேலே