உன்னால் நான்
அன்பே
ஒருமுறை உன்னை நினைத்த
என் இதயத்தை
ஓராயிரம் முறை மறைத்தேன்
ஆனால்
ஒருமுறை மறக்க முடியவில்லை!,
உறக்கத்தில் ஒருமுறை உன்னை
நினைத்து உறங்கினேன்
அதனாலோ என்னவோ
இன்று ஒவ்வொரு நொடியும்
உறங்க முடியாமல் தவிக்கிறேன்,
உடலில் ஓடும் குருதி எங்கும்
ஏனொ எரிதழலாக எரியுதடி
என்னவளே உன்னை என்
எதிரில் காணும் போது,
அகிம்சை என்னும் உன்
ஒற்றைப்பார்வையில்
விழுந்த நாள்முதல் ஓயாமல்
இம்சையை அனுபவிக்கின்றதடி
அழகே என் இதயம்!,
மாற்றம் இல்லா மனிதனாக
உலகில் வாழவேண்டும் என்று
நினைத்தேன்! ஆனால்
இன்றுதான் தெரிகின்றது உயிரே
உன்னால் இன்று நானே
மாறிவிட்டேன் என்று...!