நம் காதலை

நம் காதலை:
கண்ணீர் வலியுடன்
இதழ் என்னும் உழியுடன்
நம் காதலை பிரிந்தோம்
நாட்கள் நரகமாக மாறியது
நிமிடங்கள் கூட உன்னை நினைக்கத் துண்டியது
இதயத்தில் வலிகளாக ஊன்றியது
வாழ்க்கையும் இருளில் மூழ்கியது
மௌனங்களும் மரணங்களாக மாறியது
உன் நினைவுகளால்
எந்த இடம் சென்றாலும்
மனம் விழிக்கும் முன்
இரு விழிகள் மழையாய் பொழிகின்றது
நாம் உறவாடியச் சுவடுகளை எண்ணி
உன் விழிகள் தந்த வலிகளை விட
இதழ்கள் தந்த வலிகள்
இதயத்தை உடைக்கின்றது
உயிரைத் துளைக்கின்றது
என்னை வாட்டி வதைக்கின்றது
வாரங்கள் வருசங்கள் ஆனது
பிரிந்த அந்த நெடிகளில் இருந்து….

எழுதியவர் : சண்முகவேல் (8-Feb-17, 4:26 pm)
Tanglish : nam kaadhalai
பார்வை : 140

மேலே